Theme Check

இறந்தும் 4 பேரின் உயிரை காப்பாற்றிய கல்லூரி மாணவன்..!!

இறந்தும் 4 பேரின் உயிரை காப்பாற்றிய கல்லூரி மாணவன்..!!

இறந்தும் 4 பேரின் உயிரை காப்பாற்றிய கல்லூரி மாணவன்..!!
X

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெளியனூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சரவணன் (19). பொறியியல் கல்லூரி மாணவரான இவர் தனது நண்பருடன் கடந்த 10-ம் தேதி மோட்டர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது திண்டிவனம் அருகே உள்ள விளங்கம்பாடியில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டர் பைக்கில் சரவணனுடன் சென்ற அவரது நண்பர் சிபி என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரி மாணவர் சரவணன் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கல்லூரி மாணவர் சரவணன் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர் சரவணனின் உடல் உறுப்புகளான இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவைகள் தானமாக வழங்கப்பட்டது.

Organ

தானமாக வழங்கப்பட்ட கல்லூரி மாணவர் சரவணனின் உடல் உறுப்புகள் சென்னை, கேரளாவிற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக சென்னை, கேரளா செல்லும் வழிகளில் போலீசாரால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு இடையூறு ஏற்படாமல் பார்த்து கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக கல்லூரி மாணவர் சரவணனின் உடல் உறுப்புகள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு தங்கு தடையின்றி சென்னை, கேரளாவிற்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டது. கல்லூரி மாணவர் சரவணனின் உடல் உறுப்புகளால் தற்போது 4 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it