Theme Check

டிக்கெட் இன்றி முன்பதிவு பெட்டிகளில் பயணித்தால் ரூ.1000 அபராதம்..!

டிக்கெட் இன்றி முன்பதிவு பெட்டிகளில் பயணித்தால் ரூ.1000 அபராதம்..!

டிக்கெட் இன்றி முன்பதிவு பெட்டிகளில் பயணித்தால் ரூ.1000 அபராதம்..!
X

'விரைவு ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணித்தால், 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என தெற்கு ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் விரைவு மற்றும் மின்சார ரயில்கள் மீண்டும் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன. விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இணைத்து இயக்கப்படுகின்றன.

ஆனாலும், பயணிகள் சிலர் டிக்கெட் எடுக்காமல் அல்லது உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர்.

இதனால், முன்பதிவு செய்து பயணிப்போருக்கு இடையூறாக உள்ளது. சில நேரங்களில் திருட்டு சம்பவங்களும் நடப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ‘விரைவு ரயில்கள் புறப்படும் போது ரயில் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்துகின்றனர்.

அதன் பின்னர், டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை மேற்கொள்கின்றனர். இருப்பினும், சிலர் முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.

எனவே, ஓடும் ரயில்களில் திடீரென சோதனை நடத்தும் வகையில் 'டிக்கெட் பரிசோதகர்கள்' குழு அமைத்து கண்காணிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

முன்பதிவு பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போரிடம் 1,000 ரூபாய் வரை அபராதம் விதித்து வருகிறோம். எனவே, உரிய டிக்கெட் இன்றி முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்’ என அவர்கள் கூறினர்.

Next Story
Share it