Theme Check

ஒரு தலைக்காதல் – மாணவி கல்லால் தாக்கி கொலை!!

ஒரு தலைக்காதல் – மாணவி கல்லால் தாக்கி கொலை!!

ஒரு தலைக்காதல் – மாணவி கல்லால் தாக்கி கொலை!!
X

சேலம் மாவட்டம் கூடமலை பகுதியை சேர்ந்த ரோஜா என்பவர் ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி. தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த சாமிதுரை என்பவர், மாணவியை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.

அடிக்கடி மாணவியின் ஊருக்கு சென்ற சாமிதுரை திருமணம் செய்ய வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் மாணவியின் உறவினர்களுக்கு தெரியவந்ததால் ஊரின் முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இனி சாமிதுரை கூடமலை பகுதிக்கு வரமாட்டார் என அவரது உறவினர்கள் உத்தரவாதம் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜாவின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு தோட்டத்திற்கு சென்று வீட்டின் பின்புற பகுதியில் பதுங்கியுள்ளான்.

slm murder

இருட்டான பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த ரோஜாவை தன்னை காதலித்து திருமணம் செய்து கொள் இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன் எனக் கூறியுள்ளான். அதற்கு ரோஜா மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் சாமிதுரை மண்ணெண்ணையை மேலே ஊற்றியுள்ளார்.

பின்னர் ரோஜாவை கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து மிதித்து கொண்டு கல்லை தூக்கி தலையில் போட்டு கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். தடுக்க முயன்ற குடும்பத்தாரையும் கீழே தள்ளி விட்டு கொடூரமாக தாக்கியுள்ளார்.

slm murder

ரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக கூடமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ரோஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் தப்பியோடிய இளைஞரை தேடிவருகின்றனர்.

newstm.in

Next Story
Share it