தொடரும் மரணங்கள்..!! தனியார் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கு மாட்டி தற்கொலை..!
தொடரும் மரணங்கள்..!! தனியார் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கு மாட்டி தற்கொலை..!

கர்நாடக மாநிலம், பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் சிவானி(21). இவர், கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி படித்து வந்தார்.
நேற்று காலை, கல்லூரியில் தேர்வு நடைபெற இருந்தது. இந்த தேர்வை எழுத சிவானி கல்லூரிக்கு வரவில்லை. இதுபற்றி சக மாணவிகள் விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர் சென்று பார்த்தபோது, சிவானி தங்கியிருந்த அறையின் கதவு உட்புறமாக பூட்டிக் கிடந்தது. கதவைத் திறக்கும்படி பலமுறை கூறியும் அவர் திறக்கவில்லை.
இதுகுறித்து கெங்கேரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, விடுதியின் அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது, மின்விசிறியில் சிவானி தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

