Theme Check

ஒரு வெறிநாய் கடித்து 20 செம்மறி ஆடுகள் பலி !

ஒரு வெறிநாய் கடித்து 20 செம்மறி ஆடுகள் பலி !

ஒரு வெறிநாய் கடித்து 20 செம்மறி ஆடுகள் பலி !
X

வெறிநாய் கடித்து 20 செம்மறி ஆடுகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் (55). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். மேலும் காத்தவராயன் சொந்தமாக 50 செம்மறி ஆடுகளை பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், காலையில் காத்தவராயன் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். மீண்டும் மாலையில் வீடு திரும்பியதும் கொட்டகையில் அடைத்தார். இதனையடுத்து நேற்று காலையில் அவர் மீண்டும் கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, ஆட்டுபட்டியில் இருந்த 12 ஆடுகள், 8 குட்டிகள் என 20 ஆடுகள் இறந்துகிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
d
மேலும் பட்டியை திறந்தபோது, அதில் இருந்து ரத்த கோலத்தில் வெறிபிடித்த நாய் ஒன்று ஓடியது. இதனால், வெறிநாய் கடித்து, ஆடுகள் பலியானது தெரிந்தது. இறந்த ஆடுகளின் மதிப்பு ஒரு லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, மதுராந்தகம் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்கவேண்டும் என காத்தவராயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in


Next Story
Share it