மாணவி இறுதிசடங்கில் திடீர் மாற்றம்.. உடலை புதைக்க முடிவு !

மாணவி இறுதிசடங்கில் திடீர் மாற்றம்.. உடலை புதைக்க முடிவு !

மாணவி இறுதிசடங்கில் திடீர் மாற்றம்.. உடலை புதைக்க முடிவு !
X

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி பள்ளியில் உயிரிழந்தார். மாணவியின் இந்த மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஸ்ரீமதி இறந்தது முதல் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாக தெரிவித்து. ஆனாலும் மாணவி சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதன்காரணமாக, மாணவி உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த முடிவுகளை ஜிப்மர் மருத்துக்குழு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ambulance

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில், இன்று காலை மாணவியின் உடல் அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து மாணவியின் உடல் சொந்தஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டது. சொந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக இருந்தது.

ஆனால், தற்போது உடலை புதைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். அங்கு ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ambulance

மாணவி மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் திடீரென பிரேத பரிசோதனையில் முடிவில் சிக்கல் இருந்தால், ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் பரிசோதனை செய்யும் வகையில் உடலை பரிசோதனை செய்வதற்காக புதைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

newstm.in

Next Story
Share it