ஒரு டீ விலை 15 ரூபாய்.. இன்று முதல் அமல்..!
ஒரு டீ விலை 15 ரூபாய்.. இன்று முதல் அமல்..!

இன்று முதல் டீ விலை 15 ரூபாயாக உயர்த்தப்படுவதாக கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கோவையில், மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் அவசர கூட்டம் நடந்தது. இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பேக்கரி செலவினங்கள் அதிகரித்துள்ளது பற்றி உறுப்பினர்கள் விவாதித்தனர்.
பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டீ விலையை உயர்த்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து, தற்போது உள்ள டீ விலையை 15 ரூபாயாக உயர்த்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், “மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை சமாளிக்க, டீ விலையை மட்டும் உயர்த்தலாம் என்று சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதன்படி, இன்று (11-ம் தேதி) முதல் ஒரு டீ 15 ரூபாய் என்ற விலையில் கோவை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும்” என்றார்.

