Theme Check

ஒரு வீடியோ.. காதலியை மிரட்டி நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்.. மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்

ஒரு வீடியோ.. காதலியை மிரட்டி நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்.. மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்

ஒரு வீடியோ.. காதலியை மிரட்டி நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்.. மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்
X

விருதுநகரைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இப்பெண்ணுக்கும் விருதுநகர் மேலத் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதாவது, பேஸ்புக் மூலமாக அறிமுகமாகி அப்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஹரிஹரன் பால் பண்ணை நடத்தி வருகிறார்.
இருவரும் காதலித்ததால் நெருங்கி பழக தொடங்கினர். இந்நிலையில் ஹரிஹரன் இளம்பெண்ணுடன் தனிமையில் நெருக்கமா இருந்ததாக கூறப்படுகிறது. அதனை அவருக்கு தெரியாமல் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவரிடம் காண்பித்து மிரட்டி தனது நண்பர்களுடனும் உல்லாசமாக இருக்க ஹரிஹரன் நிர்பந்தப்படுத்தி உள்ளார்.
இதற்கு உடன்படாவிடில் அந்த வீடியோவை பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இதற்கு பயந்த அந்தப் பெண் வேறு வழியின்றி நண்பர்களுடனும் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
Rape
ஆனால் இக்கொடுமை நீண்ட நாள் நீடித்ததால், அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மார்ச் 18ஆம் தேதி வரை இது நடந்து வந்ததால் போலீசில் புகார் அளிக்க முடிவுசெய்தார். அப்போது, ஹரிஹரன் மேலும் சில நண்பர்களுடன் தனிமையில் இருக்க இளம்பெண்ணை, நிர்பந்தப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணின் காதலன் ஹரிஹரன் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளி மாடசாமி (37), கார் டிரைவர் பிரவீன் (22), ரைஸ் மில் நடத்தி வரும் ஜூனாத் அகமது (24), மற்றும் 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை பயின்று வரும் நான்கு மாணவர்கள் என 8 பேரை கைது செய்துள்ளனர், தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் போல விருதுநகரில் நடந்துள்ள சம்பவம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தை உலுக்கியுள்ளது.
Neestm.in
Next Story
Share it