Theme Check

கள்ளக்காதலனிடம் கடன் வாங்கிய பெண் கணவருடன் மரணம்!!

கள்ளக்காதலனிடம் கடன் வாங்கிய பெண் கணவருடன் மரணம்!!

கள்ளக்காதலனிடம் கடன் வாங்கிய பெண் கணவருடன் மரணம்!!
X

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் முளங்குழியை சேர்ந்த பிளம்பராக பணியாற்றிவரும் ஜான்சன் (40) - சந்தியா (34) தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் குழந்தை இல்லை.

இந்நிலையில், சந்தியா தனது கணவருக்கு தெரியாமல் தட்டான்விளையை சேர்ந்த ஆன்றோ பிரபிளின் என்பவரை திருமணம் செய்வதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக 30லட்ச ரூபாய் வாங்கியுள்ளார்.

இதையடுத்து ஆன்றோ பிரப்ளின் தனது தாயாருடன் சந்தியாவின் வீட்டுற்கு வந்து, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். துகுறித்து கணவன் மனைவியிடையே பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.

knk

இந்நிலையில் உறவினர்கள் சந்தியாவின் போனிற்கு அழைத்தபோது போன் எடுக்காததால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். வீடு பூட்டியிருத்ததை அடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, சந்தியா தூக்கில் தொங்கிய நிலையிலும், அருகில் கட்டிலில் ஜான்சன் விஷமருந்திய நிலையிலும் சடலமாக இருந்தனர்.

இது குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் காவல்துறையினர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜான்சன் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it