திருட வந்த இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்!!

திருட வந்த இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்!!

திருட வந்த இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்!!
X

பணத்தை திருட வந்த இடத்தில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

முல்லா என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளோடு 10 வருடங்களாக சென்னை தண்டையார்பேட்டை ..சி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பக்கத்து வீட்டில் வசித்து வரும் மகேஷ்குமார் என்ற இளைஞர் பால்கனி வழியாக சுவர் ஏறி குதித்து முல்லாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அப்போது அவர் டேபிள் மீது வைத்திருந்த பணத்தை திருடியுள்ளார். பின்னர் குழந்தைகளோடு படுத்திருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்து அப்பெண் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டார்.

chn Crime

முல்லா எழுந்து பார்த்த போது மகேஷ் குமார் அங்கிருந்து கீழே குதித்து தப்பி ஓடினார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் மகேஷ்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இரவு நேரத்தில் திருட வந்து, பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it