வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி.. அதிமுக, திமுக வேட்பாளர்கள் புகார்..!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி.. அதிமுக, திமுக வேட்பாளர்கள் புகார்..!

விருதுநகர் அருகே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் சின்னத்தில் குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் போட்டியிடும் கட்சி சின்னங்கள் பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சி வேட்பாளர்களின் சின்னங்கள் தெளிவாக தெரியவில்லை என்றும் மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் சின்னங்கள் தெளிவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக, திமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
Next Story

