Theme Check

அதிமுக எம்எல்ஏ வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!

அதிமுக எம்எல்ஏ வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!

அதிமுக எம்எல்ஏ வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!
X

கோவை சிங்கநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல். கே.ஆர்.ஜெயராம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு, நகை கடை, அலுவலகம், உறவினர்களின் வீடு, உதவியாளர் வீடு என ஆறு மாவட்டங்களில் மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை ,சென்னை, சேலம் ,திருப்பத்தூர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

raid

இந்நிலையில் சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.. கே.ஆர்.ஜெயராம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் எஸ்.பி.வேலுமணிக்கின் உறவினருக்கு சொந்தமான திருப்பூர் குமரன் சாலையில் உள்ள நகைக்கடையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

அதே போல், பொள்ளாச்சியில் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் பங்குதாரராக முதலீடு செய்துள்ளதாக கூறப்படும் மகாகணபதி நகைகடை மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it