Theme Check

அதிமுக வரவு செலவு... வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்

அதிமுக வரவு செலவு... வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்

அதிமுக வரவு செலவு... வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்
X

அதிமுக வரவு- செலவு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் புகைச்சலாக இருந்துவந்த நிலையில் நேற்று கலவரமாக வெடித்தது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழு தேர்வுசெய்தது பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, முனுசாமியை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இந்த குழப்பங்களுக்கு இடையே இருதரப்பினரும் தனித்தனியே தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த பொருளாளர் பதவி அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அப்பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

sdf

இந்த நிலையில, அதிமுக வரவு- செலவு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தான் பொருளாளர் என்றும், வேறு யாரும் வரவு-செலவுகளை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்றும் வங்கிகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இந்திய தேர்தல் ஆணைய சட்டத்தின் படி இன்று வரை நான்தான் ஒருங்கிணைப்பாளர், நான்தான் பொருளாளர். நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் போது என்னைக் கேட்காமல் எந்தவித வரவு-செலவு கணக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை கேட்காமல் வரவு-செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு இபிஎஸ் கடிதம் எழுதிய நிலையில் ஓ.பிஎஸ்.ஸூம் கடிதம் எழுதியுள்ளார்.

sdf

அதிமுக பொருளாளர் பதவி தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் போட்டி கடிதத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் அதிமுக வங்கிக் கணக்குகளுக்கு உரிமை கொண்டாடுவதால் வங்கிகள் யாரை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்

newstm.in

Next Story
Share it