Theme Check

பரபரப்பு.. வெற்றி பெற்ற சில நிமிடங்களில் திமுகவுக்கு தாவிய அதிமுக கவுன்சிலர்..!

பரபரப்பு.. வெற்றி பெற்ற சில நிமிடங்களில் திமுகவுக்கு தாவிய அதிமுக கவுன்சிலர்..!

பரபரப்பு.. வெற்றி பெற்ற சில நிமிடங்களில் திமுகவுக்கு தாவிய அதிமுக கவுன்சிலர்..!
X

கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சிகளே முன்னிலை பெற்று வருகின்றன.

இந்நிலையில், மதுரை மேலூர் நகராட்சி 9-வது வார்டில் அதிமுக சார்பில் அருண் சுந்தர பிரபு என்பவர் போட்டியிட்டார். இவர், 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் அருண் சுந்தர பிரபு, அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

வெற்றி அறிவிப்பு வந்த சில நிமிடங்களில் மேலூர் அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்த நிகழ்வு அதிமுகவினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it