சாலை போடாமலே ரூ.3 கோடி எடுத்துட்டாங்க.. அதிமுக முன்னாள் அமைச்சர் புகார் !!
சாலை போடாமலே ரூ.3 கோடி எடுத்துட்டாங்க.. அதிமுக முன்னாள் அமைச்சர் புகார் !!

இந்த மாவட்டத்தில் மட்டும் சாலைகள் வேலை செய்யாமலேயே சுமார் 3 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
கரூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அதன்பின்னர் நடந்த ஊராட்சி தேர்தல்களிலும் கரூர் பெரும் தோல்வியை சந்தித்தது. அங்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் திமுக அரசின் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், கரூரில் உள்ள ஈசநத்தம், கூம்பூர், வீரியப்பட்டி ஆகிய சாலைகளை கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் அவர் புகார் மனு ஒன்றையும் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கரூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் 170 கோடியில் நெடுஞ்சாலைத் துறையில் பணிகளுக்கு ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. ஈசநத்தம், கூம்பூர், வீரியப்பட்டி ஆகிய சாலைகளை, வேலை செய்யாமல் பணம் எடுத்துள்ளனர். நன்றாக உள்ள இந்த சாலைகள், புதிதாக அமைக்கப்பட உள்ளதாகக் கூறி சுமார் 3 கோடி அரசு பணம் எடுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் தில்லு முள்ளு நடக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, கரூர் மாவட்டதில் நெடுஞ்சாலை துறை, கிரசர், சவுடு மண் என திமுகவினர் கூறு போட்டு விற்றுவருகின்றனர். 140 கோடி வேலையை காண்ட்ராக்டர் ஒருவர் மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளார், எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
newstm.in

