சரியான எதிர்க் கட்சியாக அதிமுக இல்லை.. போட்டுத் தாக்கும் சசிகலா..!
சரியான எதிர்க் கட்சியாக அதிமுக இல்லை.. போட்டுத் தாக்கும் சசிகலா..!

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் வி.கே.சசிகலா கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “அ.தி.மு.க.வில் தற்போது இருப்பவர்களை மறைந்த முதல்வர் ஜெயலிலதாவுடன் ஒப்பிட முடியாது.
ஒரு கட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கான தலைவரை கட்சித் தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர், தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவராக இருந்தால்தான் அந்த தலைமையின் கீழ் அனைவரும் கட்டுப்பட்டு இருப்பார்கள்.
அ.தி.மு.கவில் தற்போது அதுபோன்ற நிலை இல்லை. பதவிக்காக அ.தி.மு.க.வில் சிலர் எனக்கு எதிராக பேசுகின்றனர். அ.தி.மு.க. தற்போது சரியான எதிர்க்கட்சியாக செயல்பட வில்லை. ஜெயலலிதா போன்ற தலைமை அ.தி.மு.க.வில் இல்லை.
தொண்டர்கள் விரும்பும் போது நான் அ.தி.மு.க.வில் இணைவேன்.அ.தி.மு.கவில் என்னை இணைக்க முடியாது என்று சொல்வதற்கு அவர்கள் யார்..?
அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது” என்றார்.

