அதிமுகவினர் ஷாக்.. எடப்பாடி பழனிசாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !!
அதிமுகவினர் ஷாக்.. எடப்பாடி பழனிசாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !!

தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருச்சி ரயில் நிலைய சந்திப்பு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி, சிவபதி வளர்மதி, நல்லுசாமி, முன்னாள் எம்பிக்கள் குமார், ரத்தினவேல் உள்ளிட்ட மேடையில் இருந்த நிர்வாகிகள், 25 பேர் மீது கண்டோன்ட்மென்ட் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

'சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், ஐந்து அல்லது அதற்கு மேலான நபர்கள் அதை கலைக்க கட்டளையிட்ட பின்னர் கூடுவது அல்லது தொடர்வது, அரசு ஊழியரால் முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்படியாமை, பொதுப்பாதையில் கூடுவதற்கு தடை (IPC Sec 143, 151, 188, 283)' ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர்.
சொத்து வரி உயர்வுக்கு, முறைப்படி போராட்டம் நடத்தி, எதிர்ப்பை பதிவு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் உரிய அனுமதியின்றி பெரியளவில் கூட்டம் கூடியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
newstm.in

