Theme Check

ஓபிஎஸ் வீட்டில் அதிமுக மகளிர் அணி குடுமிப்பிடி சண்டை!!

ஓபிஎஸ் வீட்டில் அதிமுக மகளிர் அணி குடுமிப்பிடி சண்டை!!

ஓபிஎஸ் வீட்டில் அதிமுக மகளிர் அணி குடுமிப்பிடி சண்டை!!
X

அதிமுக ஒருங்கிணைப்பாளர் வீட்டில் அதிமுக மகளிர் அணியினர் குடுமிப்பிடி சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் கனகலட்சுமி (40) தனது ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் .பன்னீர்செல்வத்தை சந்திக்க கிரீன் வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.

அங்கு அதிமுக விருகம்பாக்கம் மகளிர் அணி துணைச் செயலாளர் ஷகிலா மற்றும் மதுரவாயலைச் சேர்ந்த அதிமுக மாவட்ட துணைத்தலைவர் மஞ்சுளா ஆகியோர் கனகலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்களை தடுத்ததாக கூறப்படுகிறது.

admk

இதனால், இரு அணிகளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே இரண்டு தரப்புகளும் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி முடியை பிடித்து அடித்துக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் கனகலட்சுமி அபிராமபுரம் காவல் நிலையத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுக பெண் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கமாறு புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it