செஸ் ஒலிம்பியாட் தீம் பாடலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்!!

செஸ் ஒலிம்பியாட் தீம் பாடலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்!!

செஸ் ஒலிம்பியாட் தீம் பாடலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்!!
X

சென்னை, மாமல்லபுரத்தில், 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடக்கிறது. இதனை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதோடு வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் போட்டியில் கலந்துக் கொள்பவர்களையும், பார்வையாளர்களையும், விருந்தினர்களையும் வரவேற்கும் வகையில் வணக்கம் செஸ் சென்னை என்ற தீம் பாடல் தமிழக அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் பாடலுக்கு இசைபுயல் .ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

arr mks

முதலமைச்சர் மு..ஸ்டாலின் விருந்தினர்களை வரவேற்று அழைக்கும் வகையில் இப்பாடலில் இடப் பெற்றுள்ளார். அதோடு இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் பரதநாட்டிய கலைஞராக தோன்றியுள்ளார்.

சமீபத்தில் வணக்கம் செஸ் சென்னை பாடலின் டீசனை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். சென்னை நேப்பியர் பாலம் செஸ் தீமில் மாற்றி அமைக்கப்பட்டு அங்கு தீம் பாடல் படமாக்கப்பட்டிருந்தது.

தற்போது முழு தீம் பாடல் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதலமைச்சர் மு. ஸ்டாலின் அவர்களுக்கும், செஸ் வீரர்களுக்கும் மற்றும் இந்தியாவை பெருமைப்படுத்த உழைக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

newstm.in

Next Story
Share it