இளையராஜா நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் காரணம்.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த யுவன் !
இளையராஜா நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் காரணம்.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த யுவன் !

துபாய் எக்ஸ்போவில் இளையராஜா உள்ளிட்ட தமிழ் இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தியதற்கு ஏ.ஆர் ரஹ்மானே காரணம் என யுவன் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அண்மையில் துபாயில் சர்வதேச அளவில் கவனம் பெறும் வகையில் துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தாண்டு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த இளையராஜா, ஒரு பகுதியாக அங்குள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவிற்கு சென்றார். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்த நிலையில் சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா ஒரு பேட்டியில் துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சி குறித்த புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நாங்கள் அங்கே இசை நிகழ்ச்சி நடத்தியதற்கு காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் தான். என் ஊரில் இருக்கும் இசைக் கலைஞர்கள் வந்து இசை நிகழ்ச்சி நடத்த நீங்கள் ஒத்துக்கொண்டால் நான் வந்து இசை நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ரஹ்மான் சொன்னார்.
நீங்கள் ஷகிரா போன்ற இசைக் கலைஞர்களை அழைத்து வருகிறீர்கள். எங்கள் ஊரிலும் சிறந்த இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். என் அப்பா (இளையராஜா) பெயர், என் பெயரை, அனிருத் பெயரை ரஹ்மான்தான் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு எக்ஸ்போ சென்று இசை நிகழ்ச்சி நடத்தினோம். இந்த எண்ணம் யாருக்கும் இருக்கும். என்றும் யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Why Rahman is Rahman!!
— AB (@ajaybaskar) June 11, 2022
Thank you, @thisisysr for sharing this.. 😀
@arrahman pic.twitter.com/iET6Q5vdU6
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

