ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!
X

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் - இசைக் கலைஞர் ரியாஸ்தீன் ஷேக் முகம்மது ஆகியோரின் திருமணம் கடந்த மே மாதம் 6-ம் தேதி எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருந்தார்.

இதையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி உடனடியாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் இடைவிடாத பணிகளில் பரபரப்பாக இயங்கி வந்ததால், நேரம் இல்லாத காரணத்தால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உடனடியாக நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், நேற்று (10-ம் தேதி) மாலை செங்கல்பட்டு மாவட்டம் ஏ.ஆர்.ஆர் ஃபிலிம் சிட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மான் - ரியாஸ்தீன் ஷேக் முகம்மது ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். அதோடு, புதுமணத் தம்பதியருக்கு மரக்கன்று அடங்கிய பசுமைக் கூடையை பரிசாக வழங்கினார்.

அத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி என தனது குடும்பத்தினருடன் மணமக்கள் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தினர் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Tags:
Next Story
Share it