Theme Check

சுமார் 500 பேர் குரூப்2, 2ஏ தேர்வு எழுத அனுமதி மறுப்பு !!

சுமார் 500 பேர் குரூப்2, 2ஏ தேர்வு எழுத அனுமதி மறுப்பு !!

சுமார் 500 பேர் குரூப்2, 2ஏ தேர்வு எழுத அனுமதி மறுப்பு !!
X

கரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வெழுத தாமதமாக வந்த 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்வுக்கூடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்2, 2ஏ தேர்வு கரூர் மாவட்டத்தில் 59 தேர்வு மையங்களில் இன்று (மே 21) நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் மட்டும் 17,114 தேர்வர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அறிவிக்கப்பட்டபடி காலை 9.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கின. முன்னதாக, 9 மணிக்கு வந்த தேர்வர்கள் யாரும் தேர்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

tnpsc

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு கலைக்கல்லூரிக்கு, 9 மணிக்குப் பின்னர் கைக்குழந்தையுடன் வந்த பெண் தேர்வர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. 9 மணிக்கு தேர்வுக்கூடத்தின் நுழைவுவாயில் மூடப்பட்டதால். தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வுக்கூடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததே தாமதத்திற்கு காரணம் என தேர்வர்கள் தெரிவித்தனர்.

tnpsc

இதுபோல பல்வேறு தேர்வுக்கூடங்களில் 9 மணிக்கு தேர்வுக்கூட நுழைவுவாயில் மூடப்பட்டதில் 9 மணிக்கு மேல் தேர்வெழுத வந்தவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தாமதம் காரணமாக தேர்வில் பங்கேற்க இயலவில்லை. தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட 17,114 பேரில் 14,882 பேர் தேர்வில் பங்கேற்றனர். 2,452 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.


newstm.in

Next Story
Share it