இந்த ஆசிரியர்களுக்கு இன்று தற்செயல் விடுப்பு.. அரசு வழங்கியது அனுமதி..!
இந்த ஆசிரியர்களுக்கு இன்று தற்செயல் விடுப்பு.. அரசு வழங்கியது அனுமதி..!

தமிழகத்தில் இன்று (19ம் தேதி), நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் இன்று பயிற்சி முடிந்ததும் நேராக ஓட்டுப்பதிவு மையங்களுக்கு செல்ல உள்ளனர்.இதனால், 50 சதவீதத்துக்கு அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்லும் பள்ளிகள்; ஓட்டுச்சாவடியாக செயல்படும் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிராமப் புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில், நகர்ப்புறங்களில் ஓட்டுரிமை உள்ளவர்கள் இன்று ஓட்டு போடுவதற்காக தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்காத கிராமப்புற பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

