சொத்துக்குவிப்பு வழக்கு – முன்னாள் முதலமைச்சருக்கு சிறை!!
சொத்துக்குவிப்பு வழக்கு – முன்னாள் முதலமைச்சருக்கு சிறை!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1999இல் ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியானா முதல்வராக செயல்பட்டபோது, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருடன் சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாக ரூ 1,467 கோடி சொத்துக்களை குவித்துள்ளார் என மத்தியப் புலனாய்வு துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், பல வளாகங்கள், குடியிருப்புகள், ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பம்புகள் மற்றும் பிற நாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட குடும்பத்தினருக்கும் மேற்படி சொத்துக்களுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் ஓம் பிரகாஷ் சவுதாலா வருமானத்துக்கு அதிகமாக 189.11 சதவீத சொத்துக்களை குவித்தது உறுதியானது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
newstm.in

