Theme Check

நாய் மீது ஆசிட் வீச்சு.. கொடூர தாக்குதல்- போதை இளைஞர்களுக்கு வலைவீச்சு !!

நாய் மீது ஆசிட் வீச்சு.. கொடூர தாக்குதல்- போதை இளைஞர்களுக்கு வலைவீச்சு !!

நாய் மீது ஆசிட் வீச்சு.. கொடூர தாக்குதல்- போதை இளைஞர்களுக்கு வலைவீச்சு !!
X

தெரு நாயை தாக்கி அதன் மீது ஆசிட் வீசிய ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு பனசங்கரி பகுதியில் கடந்த மார்ச் 4 ஆம் தேதி நடந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இரவில் தலைக்கேறிய மதுபோதையில் 5 இளைஞர்கள் வீதியில் நடந்துசென்றுக்கொண்டிருந்தனர். அப்போது தெரு நாய் ஒன்று அவர்களை பார்த்து குரைத்துள்ளது.

drinks

இதனால் கோபமடைந்த அவர்கள், எங்களை பார்த்தே குரைக்கிராயா என ஆத்திரத்தில் அந்தநாயை போதையில் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் கம்பத்தில் கட்டி வைத்து நாயை கடுமையாக அடித்தனர். அத்துடன் தங்களிடமிருந்து ஆசிட்டையும் நாயின் மீது ஊற்றினர். இதனால் வலியால் துடித்த நாயின் நிண்ட நேரம் வந்த அலறல் சத்தம் வந்த மூதாட்டி நாயை அக்கும்பலிடம் இருந்து காப்பாற்ற சென்றார்

drinks

இதனால் கோபமடைந்த அந்த கும்பல், மூதாட்டியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றது. இதனையடுத்து படுகாயமடைந்த நாய், விலங்குகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த கும்பலின் அட்டகாசம் குறித்து போலீஸ் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார். இதையடுத்து, அடையாளம் தெரியாத அந்த 5 இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு தேடி வருகின்றனர்.


newstm.in

Tags:
Next Story
Share it