அதிரடி! அறநிலையத்துறையின் நோட்டீஸை ரத்து செய்த நீதிமன்றம்!!
அதிரடி! அறநிலையத்துறையின் நோட்டீஸை ரத்து செய்த நீதிமன்றம்!!

குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரத்தில் அமைந்துள்ள குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா, காசி விஷ்வநாதர் திருக்கோயில் மற்றும் வேணு கோபாலேஷ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளதாகக் கூறி, பூங்கவை காலி செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை எதிர்த்து குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா அமைந்திருக்கும் நிலம், கோவில்களுக்கு சொந்தமான நிலம் அல்ல என தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிலம், வருவாய் துறைக்கு சொந்தமானதா, அறநிலைய துறைக்கு சொந்தமானதா என்பது தொடர்பான விவகாரம், நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி, நில உரிமை தொடர்பான விவகாரம் நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதாகக் கூறி,குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய வேண்டும் என்ற இந்து சமய அறநிலையத்துறையின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.
newstm.in

