அதிரடி! பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகள் செல்லாது!!
அதிரடி! பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகள் செல்லாது!!

பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகள் மற்றும் ஆன்லைன் படிப்புகள் செல்லாது என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போதிய ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர் இல்லை என்றும், பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியை பெறாமல் தொலைதூர கல்வி திட்டம் மற்றும் ஆன்லைன் வழிக் கல்வித் திட்டங்கள் நடத்தி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தொலைதூர படிப்புகள் மற்றும் ஆன்லைன் படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று, பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே பெற்ற அனுமதி 2020ஆம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டதால், அதன் பிறகு பெற்ற பட்டங்கள் செல்லாது என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

2020ஆம் ஆண்டுக்கு பிறகு பல்கலைக்கழக மானியக் குழுவின் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்த கல்வித் திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்திருக்கிறது என்றும், இது முற்றிலும் விதிமீறல்கள் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த கல்வி ஆண்டு அனுமதி கேட்டு விண்ணப்பித்த பல்கலைக்கழக விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது எனவும், அடுத்த இரண்டு கல்வி ஆண்டுகளுக்கு இந்த கல்வித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

தொலைதூர கல்வி திட்டம் மற்றும் ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டங்களில் மாணவர்கள் சேர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள பல்கலைக்கழக மானியக் குழு , இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரும், உயர்கல்வித்துறை செயலாளரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
newstm.in

