Theme Check

அதிரடி! இந்திய அணிக்கு இவர்தான் புதிய கேப்டன்!!

அதிரடி! இந்திய அணிக்கு இவர்தான் புதிய கேப்டன்!!

அதிரடி! இந்திய அணிக்கு இவர்தான் புதிய கேப்டன்!!
X

ஐபிஎல் முடிந்த பிறகு ஜூன் 9 முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளது. அதில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சீனியர் வீரர்களுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் இந்திய அணியை களமிறக்க பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

hardik-pandya

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அனைவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி களைப்பில் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் பயோபபுள் என்று கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பது பெரும் மன உளைச்சல் தரக்கூடியது.

shikhar-dhawan

எனவே இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா அல்லது ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவர் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it