வெளியானது அதிரடி அறிவிப்பு.. வாக்கு எண்ணும் மையத்தில் கண்டிப்பா இதை ஃபாலோ பண்ணுங்க..!
வெளியானது அதிரடி அறிவிப்பு.. வாக்கு எண்ணும் மையத்தில் கண்டிப்பா இதை ஃபாலோ பண்ணுங்க..!

தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை (22-ம் தேதி) நடைபெற உள்ளதால், தமிழக காவல்துறை வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வேட்பாளர் ஒருவர் மற்றும் ஏஜென்ட் ஒருவர் மட்டும் அனுமதி. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் அனுமதி.
வேட்பாளர் ஒருவர் மற்றும் ஏஜென்ட் ஒருவரும் Strong Room செல்ல கண்டிப்பாக அனுமதி இல்லை.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டிய பாஸ் (ID Card With Photo) இல்லையெனில் கண்டிப்பாக அனுமதி கிடையாது
வேட்பாளர் ஒருவர் மற்றும் ஏஜென்ட் ஒருவரும் RO அலுவலகத்தில் உள்ள CCTV கேமராவை பார்க்க மட்டும் அனுமதி.
பிரஸ் (Press) நபர்கள் அனுமதி உண்டு & Strong Room செல்ல கண்டிப்பாக அனுமதி இல்லை.
வேட்பாளர் ஒருவர் மற்றும் ஏஜென்ட் ஒருவர் மட்டும் அனுமதி மற்றும் அவருடைய செல்போன் மற்றும் வாகனம் கண்டிப்பாக அனுமதி இல்லை.
முன்னதாக, பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ள சென்னை, மதுரை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள 5 வார்டுகள் உட்பட 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் பதிவான வாக்குகளும் நாளையே எண்ணப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
![]()

