Theme Check

நாய் காதல் செய்தால் நடவடிக்கை.. ராஜாஜி சிறுவர் பூங்காவில் எச்சரிக்கை..!

நாய் காதல் செய்தால் நடவடிக்கை.. ராஜாஜி சிறுவர் பூங்காவில் எச்சரிக்கை..!

நாய் காதல் செய்தால் நடவடிக்கை.. ராஜாஜி சிறுவர் பூங்காவில் எச்சரிக்கை..!
X

மதுரை ராஜாஜி சிறுவர் பூங்காவில், காதலர்கள் என்ற போர்வையில் எல்லை மீறும் சில்மிஷ ஜோடிகளை திருத்த, ‘நாய் காதல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மதுரை அழகர் கோவில், திருப்பரங்குன்றம், கே.கே.நகர், சுந்தரம் பூங்கா, ராஜாஜி சிறுவர் பூங்கா என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காதலர்கள் அத்துமீறுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோடை விடுமுறை நேரத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பூங்காவிற்கு வரும் நேரங்களில் காதலர்கள் என்ற போர்வையில் சில்மிஷங்கள் ஈடுபடும் சிலர் எதிரே உள்ளவர்கள் முகம் சுழிக்கும் படி நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்தது.

அதேபோல், காந்தி மியூசியத்தில் காதலர்கள் தொல்லை அதிகரித்ததால் உள்ளே அமர்ந்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காந்தி மியூசியம் ரோட்டில் உள்ள மாநகராட்சியின் ராஜாஜி சிறுவர் பூங்காவில், ‘நாய் காதல் செய்யாதீர்கள்; மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கடுமையாக எச்சரித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it