Theme Check

மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த செயற்பாட்டாளர் கைது.. ஐநா அதிகாரி கண்டனம் !!

மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த செயற்பாட்டாளர் கைது.. ஐநா அதிகாரி கண்டனம் !!

மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த செயற்பாட்டாளர் கைது.. ஐநா அதிகாரி கண்டனம் !!
X

குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. சபையின் அதிகாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பெரியளவில் கலவரம் நடந்தது. இதில் பலரும் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

குஜராத் கலவர வழக்குகளில் பிரதமர் மோடி விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில், போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை அகமதாபாத் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

un

செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு இந்திய அளவில் பல்வேறு தலைவர்கள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பாதுகாப்பாளர்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் மேரி லாலர் கூறுகையில், தீஸ்தா வெறுப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான வலுவான குரல் கொடுத்து வருபவர். மனித உரிமைகளை பாதுகாப்பது குற்றமல்ல, என்றார்.

newstm.in

Tags:
Next Story
Share it