ஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் நகுல்..!!

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் நகுல்..!!

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் நகுல்..!!
X

பிரபல நடிகை தேவையானியின் சகோதரரும்,பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர், நடிகர் நகுல். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை மணந்தார்.

நகுல் மற்றும் ஸ்ருதி ஜோடி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளையிடுவதன் மூலமும் பிரபலமான ஜோடிகளாக இருந்து வருகின்றனர் . பின்னர் சமீபத்தில் இருவரும் தங்களது 6வது திருமண நாளையொட்டி அழகிய போட்டோஸை சமூக வலைதளங்கள் மூலம் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறோம் என அறிவித்தனர்.

1

இந்நிலையில் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை பகிர்ந்துள்ளார் நகுல் மனைவி ஸ்ருதி.அவர் வெளியிட்டுள்ள வீடியோவுடன் "அற்புதமான வாட்டர் பிரசவத்தின் மூலம் எங்கள் சிறு ஆண் குழந்தையை மீண்டும் வரவேற்கிறேன். எங்கள் தேவதை காட் டாக்டர் விஜயா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இன்னும் மிக யதார்த்தமாக உணர்கிறாள், அகிரா தனது சிறிய சகோதரனைப் பார்த்து பிரமிப்பில் இருக்கிறாள். அவள் அவனிடம் எப்போதும் மென்மையாக இருந்தாள்! என குறிப்பிட்டுள்ளார். இந்தத்தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

நகுல் ஸ்ருதி ஜோடிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.இந்த குழந்தையும் வாட்டர் பர்த் (water birth) முறையில் தான் பிறந்தது என சொல்லி ஸ்ருதி தெரிவித்து உள்ளார்.

Tags:
Next Story
Share it