நடிகர் சரத்குமார் குடும்பத்தில் புகுந்த கொரோனா !!

நடிகர் சரத்குமார் குடும்பத்தில் புகுந்த கொரோனா !!

நடிகர் சரத்குமார் குடும்பத்தில் புகுந்த கொரோனா !!
X

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார். சிம்புவுடன் போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

varalaksmi

இதையடுத்து விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, மாரி 2, சண்டக்கோழி 2, சர்தார் போன்ற படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக விஜய்யுடன் இவர் நடித்திருந்த சர்தார் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. வில்லி கதாபாத்திரங்கள் இவருக்கு சிறப்பாக பொருந்துகின்றன. தற்போது தமிழில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

37 வயதாகும் இவருக்கு திருமணம் செய்து வைக்க இவரது குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

varalaksmi

தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து வரலட்சுமி சரத்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், முன்னெச்சரிக்கையுடன் இருந்த போதிலும் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

நடிகர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர்களான தாங்கள் மாஸ்க் அணிவதில்லை என்றும் கூறியுள்ளார். இங்கு கோவிட் பாதிப்பு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களில் தன்னை சந்தித்தவர்கள், கண்டிப்பாக கோவிட் அறிகுறிகளை கவனித்து பரிசோதனை செய்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.



newstm.in

Tags:
Next Story
Share it