நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி !!

நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி !!

நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி !!
X

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திரத்தை பூர்விகமாக கொண்ட சண்டைக் கலைஞர் வெங்கல் ராவ். ஆந்திராவை பூர்விகமாக கொண்டாலும் தமிழக ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்தவர். வெங்கல் ராவ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சண்டைக் காட்சிகளில் பங்கேற்றுள்ளார்.

இவர் பல திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார். குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் நகைச்சுவை காட்சிகளில் நடிக்கத் துவங்கியதும் மிக பிரபலமானார். உடனே நியாபகத்துக்கு வரவேண்டும் என்றால் கொரில்லா சிறை காமெடியை கூறலாம்.

venkal rav

இதுபோன்று நகைச்சுவை காட்சிகளில் இவரது வித்தியாசமான உடல்மொழியும், வசன உச்சரிப்பும் ரசிகர்களிடையே மிக பிரபலம். திரைப்படங்களில் நடித்தாலும் ஏழ்மை நிலையிலேயே இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வடிவேலு திரைப்படங்களில் நடிக்காததால் இவருக்கும் வாய்ப்புகள் இல்லாமல் இருந்துள்ளார்.

venkal rav

இந்த நிலையில் சிறுநீரக பிரச்னை காரணமாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். இதனையடுத்து அவர் குணமடையவேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


newstm.in

Tags:
Next Story
Share it