நிர்வாணமாக நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
நிர்வாணமாக நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ‘லைகர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த போஸ்டரில், விஜய் தேவரகொண்டா உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் கையில் ஒரு பூங்கொத்தை மட்டும் வைத்துக் கொண்டு நிற்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, ‘பிகே’ படத்தில் அமீர்கான் நிர்வாணமாக நடித்த கேரக்டர் போல் இருக்கும் இந்த போஸ்டர், படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். மணிசர்மா இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குத்துச்சண்டையை கதைக்களமாகக் கொண்ட இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A Film that took my everything.
— Vijay Deverakonda (@TheDeverakonda) July 2, 2022
As a performance, Mentally, physically my most challenging role.
I give you everything!
Coming Soon#LIGER pic.twitter.com/ljyhK7b1e1