Theme Check

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் தீபாராதனை காட்டி நடிகர் விஜய் அஞ்சலி..!

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் தீபாராதனை காட்டி நடிகர் விஜய் அஞ்சலி..!

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் தீபாராதனை காட்டி நடிகர் விஜய் அஞ்சலி..!
X

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் (46) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.

அதுபோல், தமிழ் திரையுலகைச் சேர்ந்த சூர்யா, விஷால் போன்ற நடிகர்கள் பெங்களூரு சென்று, புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
Image
இந்நிலையில், நடிகர் விஜய் பெங்களூரு சென்று புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மலர் தூவியும், தீபாராதனை காட்டியும் அஞ்சலி செலுத்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story
Share it