Theme Check

“நடிகர் விஜய்க்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும்” : வணிக வரித்துறை!!

“நடிகர் விஜய்க்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும்” : வணிக வரித்துறை!!

“நடிகர் விஜய்க்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும்” : வணிக வரித்துறை!!
X

நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வணிக வரித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் விஜய் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, விஜய் தரப்பில் 7,98,075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30,23,609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17இல் வணிக வரித்துறை உத்தரவிட்டது.

vijay

இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கைகளுடன் அடையார் கேட் ஹோட்டல் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுக்களும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2008ஆம் ஆண்டு கார் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் வரி செலுத்தக்கோரி 2021ஆம் ஆண்டு தான் நோட்டீஸ் அளித்ததால் அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டுமென வாதிப்பட்டது.

நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர், கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் ஆனால் தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

hc

இதனிடையே நடிகர் விஜய் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள வணிக வரித்துறை, நுழைவு வரியை செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் 2019ல் உத்தரவு பிறப்பித்த பிறகும் வரி செலுத்தப்படவில்லை என்று கூறியது.

குறித்த காலத்தில் நுழைவு வரி செலுத்தாததால், 2005 டிசம்பர் முதல், 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக 30,23,609 ரூபாய் செலுத்தும்படி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாதங்களை கேட்ட நீதிபதி, நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் ஹோட்டல் தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

newstm.in

Next Story
Share it