பிரபல வில்லன் நடிகர் மறைவிற்கு நடிகர் விஜயகாந்த் இரங்கல்..!!

பிரபல வில்லன் நடிகர் மறைவிற்கு நடிகர் விஜயகாந்த் இரங்கல்..!!

பிரபல வில்லன் நடிகர் மறைவிற்கு நடிகர் விஜயகாந்த் இரங்கல்..!!
X

பிரபல நடிகர் சலீம் கவுஸ் காலமானார். இவருக்கு வயது 70.தமிழ் சினிமாவில் வலுவான கதாபாத்திரத்திலும், வசனங்களாலும் வில்லனாக நடித்துள்ளார் சலீம் கவுஸ்.இவர் தமிழ் சினிமாவில் வெற்றிவேல் படத்தின் மூலம் ஜிந்தா கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே அட்டகாசமான நடிப்பாலும், வித்தியாசமான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார். அதேபோல் சின்ன கவுண்டர் படத்திலும் சக்கரை கவுண்டர் ஆக நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சலீம் மறைவுக்கு நடிகர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் , 'நடிகர் சலிம் கவுஸ் அவர்கள் இதயக்கோளாறு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

மிகச்சிறந்த நடிகரும், பழகுவதற்கு நல்ல மனிதருமான திரு. சலிம் கவுஸ் அவர்கள் , சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் என்னுடன் 'சக்கரை கவுண்டர்' கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.


Tags:
Next Story
Share it