படப்பிடிப்பில் நடிகர் விஷால்க்கு எலும்பு முறிவு.. கேரளாவில் சிகிச்சைக்கு அனுமதி !
படப்பிடிப்பில் நடிகர் விஷால்க்கு எலும்பு முறிவு.. கேரளாவில் சிகிச்சைக்கு அனுமதி !

நடிகர் விஷால்க்கு சண்டை காட்சிகள் என்ற அவ்வளவு ப்ரியம். அவர் நடித்து வரும் திரைப்படங்களில் அதிரடி சண்டை காட்சிகள் தூக்கலாகவே இருக்கும். அந்த வகையில், அண்மையில் வெளியான வீரமே வாகை சூடும் படம் தியேட்டர்களில் வெற்றிநடை போட்டுவருகிறது.
அப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் லத்தி. ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் சூட்டிங்கில் கலந்து கொண்ட அவர், சண்டைக்காட்சிகளில் நடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட விபத்தில் விஷாலுக்கு ஹேர்லைன் பிராக்சர் எனப்படும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், உடனடியாக படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எலும்புகளில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக விஷால் கேரளவுக்கு சென்றார். 3 வாரம் அங்கு தங்கியிருக்கும் விஷால், கால் எலும்பு முறிவுக்கான சிகிச்சையை தொடர உள்ளார்.

இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எனினும் விஷால் இல்லாத காட்சிகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எலும்பு முறிவு சரியான பிறகு மீண்டும் லத்தி படப்பிடிப்பில் விஷால் பங்கேற்கிறார். அநேகமாக மார்ச் முதல் வாரத்தில் லத்தி இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹேர்லைன் பிராக்சர் என்றால், அழுத்ததின் காரணமாக தோல் கிழியாமல் எலும்புகளில் ஏற்படும் விரிசல் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அறுவை சிகிச்சை இல்லாமல் மாவுக்கட்டு மூலம் இதனை குணப்படுத்த முடியும்.
newstm.in

