நடிகை காஜல் அகர்வாலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து !!
நடிகை காஜல் அகர்வாலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து !!

இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், கடந்த 2008ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து ராஜமவுலி இயக்கிய மாவீரா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமானார். இந்த வெற்றியின் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

குறுகிய காலத்திலேயே தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடனும், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., ரவி தேஜா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
படங்களில் நடித்துவந்த இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார். அதன்பின்னர் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிச்சிலு தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
newstm.in

