வெறித்தனமான வெற்றி.. விஜய்க்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து..!

வெறித்தனமான வெற்றி.. விஜய்க்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து..!

வெறித்தனமான வெற்றி.. விஜய்க்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து..!
X

நடிகர் விஜய்யின் 48-வது பிறந்தநாள் இன்று. இதை முன்னிட்டு, அவருடைய ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

அவருக்கு விதவிதமாக போஸ்டர்களை ஒட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுபோல், நடிகர் விஜய்க்கு திரையுலக பிரபலங்களும், நண்பர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பூப் போல மனசு... ஏறாத வயசு.. கோலிவுட்டின் ‘வாரிசு' தளபதி விஜய்; பிறந்தநாள் வாழ்த்துகள் நடிகர் விஜய் சார். இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய மகிழ்ச்சியையும் வெறித்தனமான வெற்றியையும் தரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it