இல.கணேசனுக்கு கூடுதல் ஆளுநர் பொறுப்பு!!
இல.கணேசனுக்கு கூடுதல் ஆளுநர் பொறுப்பு!!

தமிழகத்தைச் சேர்ந்த மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசனுக்கு மேற்குவங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
குடியரசு தலைவர் அல்லது குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவோர் வேறு எந்த அரசு மற்றும் அரசு சார்ந்த பதவிகளில் இருக்கக் கூடாது.

எனவே அந்த விதிகளின் அடிப்படையில் மேற்குவங்க ஆளுநர் பொறுப்பில் இருந்து ஜெகதீப் தன்கர் விலகினார். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் பதவி காலியான நிலையில் அம்மாநிலத்தின் ஆளுநராக மணிப்பூர் மாநில ஆளுநர் இல கணேசனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அதுபோல் மணிப்பூர் மாநில ஆளுநர் இல கணேசனுக்கு மேற்குவங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
newstm.in

