Theme Check

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!!

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!!

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!!
X

தமிழகம் முழுவதும் இன்று முதல் மழலையர் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளன. திரையரங்கு, உணவகம் மற்றும் மால்களில் 100 சதவீத அனுமதி அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இன்று முதல் மார்ச் 2 வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 200 பேர் வரை பங்கேற்கலாம்.

நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பொருட்காட்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்கள், விடுதிகளில் 100 சதவீதம் பேர் அமர்ந்து உணவு அருந்தலாம்.

theatre

உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்களும் முழுமையாக செயல்படலாம். திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்களும் முழுமையாக செயல்படவுள்ளன.சலுான்கள் மற்றும் அழகு நிலையங்கள் போன்றவைகளும் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படத் தொடங்கியுள்ளன.

newstm.in

Next Story
Share it