அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை.. உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பு..!
அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை.. உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பு..!

தமிழகத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22-ம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22-ம் தேதி முதல் www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 7-ம் தேதி கடைசி நாளாகும் என கல்லூரி கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 27-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 22-ம் தேதியே ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

