வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு!!
வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு!!

சென்னை தாம்பரத்தில் தனியார் மருத்துவமனையில் வயிற்று வலி சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அடுத்த திருவள்ளுர் தெருவை சேர்ந்த பாபு (41) - திலகா (30) தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று முன் தினம் பாபுவுக்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டதால் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
அவருக்கு மருத்துவர் ஹரிஹரன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் உறவினர்களிடம் மருத்துவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

போதிய பணம் இல்லாத்தால் வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக பாபுவை டிஸ்சார்ஜ் செய்யுமாறு உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அலைகழித்து வந்த நிலையில் திடீரென பாபு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவர் ஹரிஹரனிடம் கேட்ட போது 15 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தியிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று அலட்சியமாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
newstm.in

