முதல்வரை தொடர்ந்து முக்கிய அமைச்சருக்கு கொரோனா..!
முதல்வரை தொடர்ந்து முக்கிய அமைச்சருக்கு கொரோனா..!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் நேற்று காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சற்று உடல் சோர்வு இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.
Next Story

