மீண்டும் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு தினசரி கொரோனா !!

மீண்டும் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு தினசரி கொரோனா !!

மீண்டும் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு தினசரி கொரோனா !!
X

இந்தியாவில் குறைந்துவந்த தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நாட்டில் 145 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து 20 ஆயிரத்து 139 ஆக பதிவானது. நேற்று தொடர்ந்து 2ஆவது நாளாக 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு அதாவது 20,038) தொற்று ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றும் புதிதாக 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,044 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,37,30,071 ஆக அதிகரித்துள்ளது.

sfd

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,660 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 18,301 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,63,651 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,40,760 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,99,71,61,438 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவே கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,93,627 பேருக்கு தடுப்ழுசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it