Theme Check

அக்னி வீரர்களுக்கு பாஜக அலுவலகத்தில் பாதுகாவலர் பணி.. பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை !!

அக்னி வீரர்களுக்கு பாஜக அலுவலகத்தில் பாதுகாவலர் பணி.. பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை !!

அக்னி வீரர்களுக்கு பாஜக அலுவலகத்தில் பாதுகாவலர் பணி.. பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை !!
X

அக்னி வீரர்களுக்கு பாதுகாவலர் பணி வழங்கப்படும் என்று கூறிய பாஜக தலைவரின் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பெரும் வன்முறையும் வெடித்துள்ளது. இதற்கு ராணுவ அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு அக்னிபத் திட்டத்தில் இடமில்லை என்றும் அறிவித்துள்ளனர். மேலும் அக்னிபத் திட்டம் குறித்து இளைஞர்களுக்கு தெளிவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் கூறிய தகவல் இளைஞர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, ராணுவத்தில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேறும் அக்னி வீரர்கள் ரூ.11 லட்சத்துடன், அக்னி வீரர்கள் என்ற பெருமிதத்துடன் இருப்பார்கள்.

ds

இந்த பாஜக அலுவலகத்திலும் எனக்கும் பாதுகாவலர்களாக இருந்தால், நான் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன்,என்று தெரிவித்தார்.

அவரது இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ராணுவ வீரர்களை அவமதித்து விட்டதாகவும், அக்னி வீரர்கள் இவ்வாறு பாஜக அலுவலகத்தின் வாட்ச்மேனாக மாறும் நிலை குறித்துதான் அஞ்சுவதாகவும் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதைப்போல டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக எம்.பி. வருண்காந்தி உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

newstm.in

Next Story
Share it