அக்னிபாத் : கடற்படையில் சேர 3 லட்சத்திற்கும் அதிக விண்ணப்பம்!!
அக்னிபாத் : கடற்படையில் சேர 3 லட்சத்திற்கும் அதிக விண்ணப்பம்!!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் திட்டத்தை திரும்ப மத்திய அரசு மறுத்து விட்டது. இதனிடையே அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேரும் நடைமுறையை ராணுவம் மேற்கொண்டுள்ளது.

இந்திய கடற்படையில் சேருவதற்கு இதுவரை மொத்தம் 3,03,328 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். திட்டம் அறிவிக்கப்பட்ட போது தீவிரமாக இருந்த போராட்டம் நாளடைவில் குறைந்தது.
இத்திட்டம் முற்றிலும் எதிரானது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், தற்போது பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். அதனால் அக்னிபாத்திற்கு எதிரான போராட்டம் நீர்த்து போய்விட்டது என்றே சொல்லலாம்.
newstm.in

