Theme Check

வேளாண் பட்ஜெட்: தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ. 8.51 கோடி, உழவர் சந்தைகளுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு !

வேளாண் பட்ஜெட்: தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ. 8.51 கோடி, உழவர் சந்தைகளுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு !

வேளாண் பட்ஜெட்: தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ. 8.51 கோடி, உழவர் சந்தைகளுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு !
X

தமிழகத்தின் 2022-23ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

கடந்த ஆண்டின் 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். வேளாண்மை துறைக்கு மொத்தமாக ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

mrk pannirselvam

தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்ட அவர்,

  • மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்
  • 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ. 15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு
  • தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ரூ. 27.51 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும்
  • தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் ரூ. 8.51 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்
  • உழவர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில், தனி இணைய முகப்பு உருவாக்கப்படும்
  • காய்கறி உற்பத்தியை அதிகரிக்க 5 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டங்கள்
  • மலர் சாகுபடியை அதிகரிக்க 5 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
  • வேளாண் துறையிலும் மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்படும்.
  • சொட்டு நீர் பாசன திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசின் நிதி பங்களிப்பில் 960 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • 2022-23-ம் ஆண்டில் 19 லட்சம் ஹெக்டேரில் ரூ. 32.48 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நெல் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும்
  • ஊரக வளர்ச்சி துறை மூலம் பண்ணைக் குட்டைகள் அமைக்க, தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகளுக்கு 1245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

mrk pannirselvam

  • சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • நீடித்த நிலையான பருத்தி இயக்கம் ரூ. 15 கோடியில் செயல்படுத்தப்படும்
  • கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 195 ரூபாய் வழங்கப்படும்
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு 5157 கோடி ரூபாய் வழங்கப்படும்.
  • சிறுதானிய திருவிழா மாநில மற்றும் மாவட்ட அளிவில் நடத்தப்படும்.
  • எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் நிதி
  • 381 கோடி ரூபாயில் 3 உணவு பூங்கா
  • மண் வளத்தை அறிந்த கொள்ள தமிழ் மண் வளம் இணைய முகப்பு தொடங்கப்படும்
  • 12 கோடி ரூபாயில் மரம் வளர்ப்பு திட்டம்
  • எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • ஆடு,மாடு, கோழி உளளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை உஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு

newstm.in

Next Story
Share it